Ipl 2026 | Faf Du Plessis | IPL ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த Faf
தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேனும், முன்னாள் சிஸ்கே வீரருமான ஃபாப் டுப்ளெஸ்சி இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்று தனது பயணத்தை தொடங்கிய டுப்ளெஸ்சி, அதன் பிறகு Rising Pune Supergiant, Royal Challengers Bengaluru மற்றும் இறுதியாக Delhi Capitals அணிக்காக விளையாடினார்.
ஐபிஎல்-லில் ஓப்பனிங் பேட்டராக மட்டும் இல்லாமல், fielder-ஆக அசாத்தியமான கேட்ச்சுக்களை பிடித்து ரசிகர்களை பலமுறை வியப்பில் ஆழ்த்தியும் உள்ளார்.
தற்போது தனது 14 வருட ஐபிஎல் பயணத்தில் இருந்து தற்காலிகமாக விலகி, அதற்கு பதிலாக பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எனினும் எதிர்காலத்தில் ஐபிஎல்லில் விளையாடுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டுப்ளெஸ்சியின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
