புறக்கணித்த இந்தியா.. பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. நேரடியாக பைனலில்..

x

லெஜண்ட்ஸ் போட்டி - மீண்டும் இந்தியா புறக்கணிப்பு - ஃபைனலில் பாக்.

உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை இந்திய அணி புறக்கணித்தது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை இந்திய லெஜண்ட்ஸ் அணியினர் புறக்கணித்திருந்தனர்.

இந்த தொடரில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்றாலும், ஒரே ஒரு வெற்றியை பெற்று இந்திய லெஜண்ட்ஸ் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற இருந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணியை இந்தியா எதிர்கொள்ள இருந்த நிலையில், இந்த முறையும் போட்டியை புறக்கணிப்பதாக இந்திய லெஜண்ட்ஸ் அணி அறிவித்துள்ளது.

இதனால் முதல் அரையிறுதி ரத்து செய்யப்பட்டதுடன், பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்