IPL 2026 | RCB vs SRH | IPL ரசிகர்களுக்கு அதிர்ச்சி - முதல் போட்டியில் ரத்து செய்ய BCCI முடிவு?

முதல் போட்டியில் ரத்து செய்ய BCCI முடிவு?

#ipl2026 #rcbvssrh ஐபிஎல் 2026 முதல் போட்டியில் தொடக்க விழா ரத்து? கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனைத்து அணிகளிலும் பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நாளை (மார்ச் 28) தொடங்குகிறது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன்களான பெங்களூரு அணியும், ஹைதரபாத்தும் மோத உள்ளன. இந்த ஆட்டம் பெங்களூரு அணியின் home ground ஆன, சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வின் போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பிரம்மாண்ட தொடக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com