CSK vs KKR | பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய CSK - பாயிண்ட்ஸ் டேபிளில் அதிரடி மாற்றம்

பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய CSK - பாயிண்ட்ஸ் டேபிளில் அதிரடி மாற்றம்

கொல்கத்தாவை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, சென்னையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக நூர் அகமது அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றியைத் தடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com