CSK | IPL 2026 | ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CSK
ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்களை சர்பிரைஸ் செய்யும் விதமாக சிஎஸ்கே நிர்வாகம் பிரத்யேக கொண்டாட்ட நிகழ்ச்சியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில், வருகிற 22ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக, பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற உள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டம், பின் சிஎஸ்கேவின் OG வீரர்களான சுரேஷ் ரெய்னா, மாத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் ஆகியோர், தற்போது உள்ள சிஎஸ்கே அணி வீரர்களுடன் இணைந்து ஃபன் மேட்ச்-அப்ஸ் போட்டிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு ரசிகர்களுக்கு nostalgic நினைவுகளை விருந்தாக படைக்கும் வகையில், ஐபிஎல்-லில் OG அணியாக புகழப்படும் சிஎஸ்கே-வின் பயணத்தை ரீ-விசிட் செய்து, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதால், மறக்க முடியாத இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் டிக்கெட்டுகள் இன்று முதல் CSK அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
