Chinnaswamystadium | RCB |கிடைத்தது 'கிரீன் சிக்னல்'- தொடக்கமே சின்னசுவாமிலதான்.. கொண்டாடும் RCB Fans

Chinnaswamystadium | RCB |கிடைத்தது 'கிரீன் சிக்னல்'- தொடக்கமே சின்னசுவாமிலதான்..கொண்டாடும் RCB Fans
Summary

ஐபிஎல் 2026 போட்டிகளை பெங்களூருவில் நடத்த அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பெங்களூரு அணி அவர்களது சமூக வலைதளங்களில் இதுகுறித்து வீடியோவை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த ஐபிஎல் வெற்றிகொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, மைதானத்தில் போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்து கர்நாடக அரசு நியமித்த நிபுணர் குழு ஆய்வு செய்தது. பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளை நடத்த நிபுணர் குழு அனுமதி வழங்கியது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், பெங்களூரு அணியின் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. இதனை RCB ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com