மலர் தூவி வரவேற்ற பெண்கள்.. திடீரென அமைச்சர் வைத்த வேண்டுகோள்.. விழாவில் பரபரப்பு
தாம்பரம் அருகே பகுதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தாம்பரம் திருநீர்மலையில் ரூ.35.8 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட சமூக நலக்கூடம் மற்றும் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்வில் எம்,பி டி.ஆர். பாலு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பெண்கள் பூக்களைத் தூவி வரவேற்றதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கேட்டுக்கொண்டதையடுத்து, பூ தூவுதல் நிறுத்தப்பட்டது.
Next Story
