"அவரை ஏன் கட்சியை விட்டு நீக்கக்கூடாது?" - அன்புமணி தரப்பு நோட்டீஸ்
பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியை ஏன் கட்சியை விட்டு நீக்கக்கூடாது என கேள்வி எழுப்பி, அன்புமணி தரப்பு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி டிசம்பர் 6ம் தேதி காவல்துறை துணை ஆணையரிடம் ஜி.கே.மணி புகார் அளித்தார். டிசம்பர் 15ம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில், ஜி.கே.மணி பேட்டியளித்தார். இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜி.கே.மணி மீது, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
