TVK | Viral Audio| வைரலான ஆடியோ.. கட்சி பதவி பறிப்பு - தவெக தலைமை அதிரடி ஆக்‌ஷன்

TVK | Viral Audio| வைரலான ஆடியோ.. கட்சி பதவி பறிப்பு - தவெக தலைமை அதிரடி ஆக்‌ஷன்

அரசு வழக்கறிஞர் நியமன ஆடியோ சர்ச்சை - தவெக நிர்வாகி கட்சி பதவி பறிப்பு கன்னியாகுமரியில் அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக பெண் வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தவெக நிர்வாகி கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஆடியோவில் தொடர்புடையதாகக் கூறப்படும் தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஷ்குமார், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com