``விஜய்யுடன் சேர்ந்து மதிய உணவு..’’ - ஜவாஹிருல்லா சரமாரி விமர்சனம்
இஸ்லாமிய சமுதாயத்தின் உணர்வுகளை புரியாத கட்சி, விஜய்யின் தவெக கட்சி என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரமலான் நேரத்தில் தவெகவின் பொதுக்குழுவில் அக்கட்சியை சேர்ந்த இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர் விஜய்யுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக தெரிவித்தார்.
Next Story
