"2026-ல் தவெக, பாமக, நாதக, பாஜக கூட்டணி?" - திடீரென அழைப்பு விடுத்த கே.பி.ராமலிங்கம்
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க பாமக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டுமென அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர், திமுகவை எதிர்க்க சிதறி கிடக்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். வரும் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தங்களை முன்னிலைப்படுத்துவதை விட, யார் வரக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story