PMK | Ramadoss | "நாளை" - சஸ்பென்ஸ் வைத்து நகர்ந்து சென்ற ராமதாஸ்
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் பேசியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமதாஸ் சேலம் வருகை தந்துள்ளார்.
அப்போது பேசிய ராமதாஸ், கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட பொதுக்குழு தனக்கு அதிகாரம் கொடுக்கும் என்றார்.
மேலும், பொதுக்குழு மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு, எதிர்பாருங்கள், நாளைய தினம் தனது பேச்சை கேட்டு விட்டு மீண்டும் தன்னை சந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்...
Next Story
