``இது துரோகம்..'' - ராமதாஸ் கடும் காட்டம்
மகளிர் உரிமைத்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்திருப்பது, டெல்டா விவசாய மக்களுக்கு செய்யும் துரோகம் என விமர்சித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளதாக தெரிவித்த அவர், மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
Next Story