சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்

பொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்
Published on

சட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன், பொது விநியோக கடைகளில் பொருட்கள் சரி வர கிடைப்பதில்லை எனவும், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி ஆய்வு நடத்த அமைச்சர் தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார். தனது தகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் அன்பழகன் கூறினார்.

இதற்கு பதிலளித்த உணவு துறை அமைச்சர் காமராஜ், தி.மு.க. உறுப்பினரின் தொகுதியாக இருந்தாலும் சரி, தனது தொகுதியாக இருந்தாலும் சரி எந்த தொகுதியிலும் ஆய்வு நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும், பொது விநியோக கடைகளில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com