கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதை அரசியல் உள்நோக்கத்துடன் பார்க்க கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் எனவும் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.