மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்

அதிமுக, பாமகவும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளா​ர்.
மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்
Published on
தருமபுரியில் அதிமுக கட்சி அலுவலக வளாகத்தில் ஏழரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிலையை, திறந்து வைத்து பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணியை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது என்றார். மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என அதிமுகவினரை கேட்டுக்கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com