பிரச்சாரத்தில் EPS வைத்த கோரிக்கை

x

"குரூப் 4 தேர்வில் குளறுபடி - மீண்டும் நடத்த வேண்டும்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நடைபெற்ற, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் பேசிய அவர், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற குளறுபடி காரணமாக பல மாணவர்கள் வேதனை அடைந்ததாகவும், சிலர் தற்கொலை முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், திமுக அரசு இந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என தனது உரையில் கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்