தூத்துக்குடியில் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது, இதனை தொடங்கி வைத்து பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக்கூடாது என்றும், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியவில்லை என்றால் வாழ்க்கையில் இன்னும் ஆயிரம் போட்டிகள் இருக்கிறது என்றும் அறிவுரை வழங்கினார்.