அதிமுக மாவட்ட அவைத் தலைவரிடம் நலம் விசாரித்த S.M.சுகுமார்

x

ராணிப்பேட்டை மாவட்டத்தில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலை கட்சியின் மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால், உடல்நலக்குறைவு காரணமாக, காரைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையறிந்த ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார், மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் நந்தகோபாலை சந்தித்து அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த மாவட்ட செயலாளர் S.M.சுகுமார், நந்தகோபால் விரைவில் குணமடைய வேண்டி ஆறுதல் தெரிவித்தார். அப்போது, ராணிப்பேட்டை அதிமுக நகரக் கழக செயலாளர் சந்தோஷம், திமிரி ஒன்றிய கழக செயலாளர் சொரையூர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்