

மணி மண்டபத்தில் வைக்கப்படும் சிலைகளின் கீழ் பெயர்கள் இடம் பெறுவது மரபல்ல என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். செய்தித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர், சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மணி மண்டபத்தில் திறப்பு விழா கல்வெட்டு மட்டுமே இடம் பெறுவது மரபு எனக் கூறினார்.