"ஈபிஎஸ் பெயரை சொல்லவில்லையா?" - சட்டென செங்கோட்டையன் சொன்ன பதில்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்விக்கு துரோகிகளே காரணம் என்று கூறியது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாதது குறித்த கேள்விக்கு, எதிர்கட்சி தலைவர், கட்சியின் பொதுச்செயலாளர் என அழுத்தமாக சொல்லி இருப்பதாக கூறிவிட்டு உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
Next Story