"ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை செய்பவர் எடப்பாடி பழனிசாமி" - சரத்குமார்

தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டபோது ஆம்புலன்ஸ் வந்தததால், பேச்சை நிறுத்திய சரத்குமார், தொண்டர்களை வழிவிடுமாறு அறிவுறுத்தி, ஆம்புலன்ஸை வழி அனுப்பி வைத்தார். பின்னர் பேசிய சரத்குமார், தமிழகத்தில் எந்த தொகுதியிலும் திமுக கூட்டணி டெபாசிட் பெறாது என்று குறிப்பிட்டார். மத்தியில் வலிமையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com