

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதை ஒட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, முதலமைச்சர் நாராயணசாமி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஏனாம் நில விவகாரத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கிரண்பேடி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை குறை கூற, கிரண்பேடிக்கு தகுதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.