PMK | பாமக உட்கட்சி மோதல் சூழலில் வன்னியர் சங்க தலைவர் கருத்து

x

பாமகவில் எந்தவித சலசலப்பும் இல்லை, கட்சியில் நிலவும் சில குழப்பங்களும் விரைவில் சரியாகிவிடும் என வன்னியர் சங்க மாநிலத்தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரான காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்னிய சங்கத்தின் மாநிலத்தலைவர் பு.தா.அருள்மொழி பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவில் தற்போது நிலவும் சிறு சிறு குழப்பங்கள் விரைவில் சரியாகி விடும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்