பாமக கூட்டம் - பங்கேற்காத அன்புமணி ராமதாஸ்... தொண்டர்கள் அதிர்ச்சி

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஊடகப்பேரவை மாநில தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஊடகங்களை சரியாக கையாண்டு பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்