PMK | Anbumani Ramadoss | "நட்டாற்றில் விட்றாதீங்க.." - கோபத்தில் பொங்கிய அன்புமணி

x

லட்சக்கணக்கான ஆசிரியர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு அலட்சியம் காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளார்... தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இந்த ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த 4 லட்சம் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார்... மேலும், நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்