SP Velumani | பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா - எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா - எஸ்.பி. வேலுமணி, எஸ்.பி. அன்பரசன் பங்கேற்பு
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றியவர். தன் வாழ்நாள் முழுவதும் சமய, சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்தவர்.
இந்நிலையில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழா கோவையில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்-க்கு நினைவுபரிசாக வெள்ளி வேலை எஸ்.பி அன்பரசன் வழங்கினார்.
எஸ்.பி. அன்பரசனின் நல்லறம் அறக்கட்டளை சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கோவை பேரூரில் தர்ப்பண மண்டபம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தர்ப்பண மண்டபத்தையும் பார்வையிட்டார்..
நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், நிறுவனருமான எஸ்.பி. அன்பரசன் தர்ப்பண மண்டபத்தின் முக்கியத்துவங்கள் மற்றும் மக்களுக்கான பயன்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் எடுத்துரைத்தார்..
