Neet Protest | DMK | கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் திமுக

Neet Protest | DMK | கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் திமுக

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - டி.ஆர்.பி. ராஜா நீட் தேர்வு நடத்தப்பட்ட விதத்தில் மட்டுமல்லாமல், தேர்வு முறையே தவறானது என்பதால், அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். மேலும், மாணவி அனிதா உயிரிழந்த நாள் முதல் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் டி.ஆர்.பி. ராஜா கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com