கோர விபத்தில் சிக்கிய நபர்.. எதையும் யோசிக்காமல் அமைச்சர் செய்த செயல்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்தில் காயம் அடைந்தவருக்கு அமைச்சர் மதிவேந்தன் உதவி செய்தார். முள்ளுகுறிச்சி பகுதியில் சாலையில் 2 பேர் கிடப்பதை பார்த்த அமைச்சர் மதிவேந்தன் காரை நிறுத்தி உடனே கீழே இறங்கினார். பின்னர் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து, காயம் அடைந்தவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், முறையான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்