பழங்குடியின மக்களோடு இரவு முழுவதும் தங்கி குறைகளை கேட்ட எம்எல்ஏ சந்திரன்
திருத்தணி அடுத்த பீரகுப்பத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் இரவு தங்கி அவர்களின் குறைகளை எம்.எல்.ஏ சந்திரன் கேட்டறிந்தார்.
மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல் வாழும் மக்களின் நிலையை உணர்வதற்காக, அவர் இரவு முழுவதும் குடிசையில் தங்கி, உணவு சாப்பிட்டு, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். அதிகாரிகளை அழைத்து, அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பழங்குடியின மக்களோடு மக்களாக சேர்ந்து குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ சந்திரனை, பலரும் வெகுவாக பாராட்டினர்.
Next Story
