கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : "அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : "அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்
Published on

கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது, அதிமுக அரசுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ரத்த தானம் செய்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலிழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல், சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும், தமக்கும் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவிநீக்கம் செய்வதோடு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் தமது அறிக்கையில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com