தமிழக அரசுக்கு எடப்பாடி திடீர் கோரிக்கை | MK Stalin | Edappadi

x

நோய்த்தாக்குதல் மற்றும் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும், 75 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில், 8 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர்கள் மஞ்சள் அழுகல், வேர் புழு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தவும், காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்