"இப்ப சொல்றேன் நீட் ரகசியத்த.." - மேடையில் போட்டுடைத்த அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com