முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைக்கண்ணு இதனை தெரிவித்தார்.