வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி யோசனை

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமது கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி யோசனை
Published on
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமது கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கொல்கத்தாவில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலம் குறித்து பாஜக வதந்திகளை பரப்பி வருவதாக கூறினார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் எனவும் இனிமேல், வாக்குச்சீட்டு முறைக்கே, திரும்ப வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கூறினார். வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிய குழு அமைத்து சோதனை நடத்த ​​வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com