"ஜனநாயகம், அரசியல் அமைப்பு சாசனம் வெற்றி பெற்றுள்ளது" - மம்தா பானர்ஜி

ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டி மேற்கொண்டிருந்த போராட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார்.
"ஜனநாயகம், அரசியல் அமைப்பு சாசனம் வெற்றி பெற்றுள்ளது" - மம்தா பானர்ஜி
Published on
ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டி மேற்கொண்டிருந்த போராட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார். 22 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த இந்த போராட்டம், மிகப்பெரிய வெற்றி பெற்றதாக, போராட்டத்தை முடித்துக் கொண்டு பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யமாட்டோம் என்ற உச்சநீதிமன்றம் அளித்த உறுதியே, தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும் மம்தா தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிரான தமது போராட்டம் அடுத்தக்கட்டமாக டெல்லியில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com