CPM Shanmugam | அதிரடி கைதுகள் - ``காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதோ.?’’ - சிபிஎம் சண்முகம் கேள்வி
#CPMShanmugam #TNPolice #Arrest #CPM #TNPolitics #ThanthiTV
CPM Shanmugam | அதிரடி கைதுகள் - ``காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதோ.?’’ - சிபிஎம் சண்முகம் பரபரப்பு கேள்வி சென்னையில், மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் கலையரசன் காவலில் வைக்கப்பட்ட சம்பவத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ ஜே. காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் தவறான கருத்து பதிவிட்டதாகக் கூறி, பேராசிரியர் கலையரசனை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும், போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கலையரசன் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் நள்ளிரவு மற்றும் விடியற்காலைக் கைதுகள் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். பிரபல பேராசிரியரை இவ்வாறு நடத்தியதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
