எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் ஈ.பி.எஸ்ஸை தவிர்த்த செங்கோட்டையன்
கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்தார். கோவை கொடிசியா மையத்தில் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில், எடப்பாடி பழனிச்சாமியும், செங்கோட்டையனும் நேரில் சந்தித்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருமண வரவேற்பு துவங்கும் முன்னரே மணமக்களை செங்கோட்டையன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்
Next Story
