நாடாளுமன்ற தேர்தல் முடிவு கடந்த 2004 மற்றும் 1996 ஆம் ஆண்டு முடிவுகளை போல் இருக்கும் என சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைநாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிவகங்கை தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாகவும், அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடைபெறும் என நம்புவதாகவும் தெரிவித்தார். கருத்துக்கணிப்புகளை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.