கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நமக்கு "நல்ல சோறு" போட்ட டெல்டா பகுதி மக்கள், இப்போது நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்பதாக தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.