"காந்தி அஸ்தியை திருடி சென்றால் மகிழ்ச்சி தான்" - கமல்ஹாசன்

பக்தர்களே, நீங்கள், காந்தியடிகளின் அஸ்தியை திருடி சென்றதால், எங்களுக்கும் சிறு மகிழ்ச்சி தான் என்று, பாஜகவை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக சாடியுள்ளார்.
"காந்தி அஸ்தியை திருடி சென்றால் மகிழ்ச்சி தான்" - கமல்ஹாசன்
Published on

பக்தர்களே, நீங்கள், காந்தியடிகளின் அஸ்தியை திருடி சென்றதால், எங்களுக்கும் சிறு மகிழ்ச்சி தான் என்று, பாஜகவை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உங்களால் சுடப்பட்டு இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அதன் மூலம் வரும் சாம்பலும், காந்தியடிகளின் சாம்பலுடன் இணைந்து கைலாயம் செல்ல வேண்டும் என்றே மக்கள் வாழ்த்த விரும்புவதாக கமல் கூறியுள்ளார். இதனிடையே, கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவு புரியாத புதிராக இருப்பதாக பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com