"விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே" - கமல்ஹாசன்

சோபியா கைது விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
"விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே" - கமல்ஹாசன்
Published on
சோபியா கைது விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றம் என்றால், அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே என, தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுதந்திர பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ள கமல் அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதி தான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com