

பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், நமக்கென்ன என இருந்த மக்கள் இப்போது வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்டார். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் என குறிப்பிட்ட அவர், தாம் பேசுவது புரியவில்லை என்று சொன்னவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது என்றார்.