``ஒரே வரியில்...'' - திமுகவை கடுமையாக விமர்சித்த உதயகுமார்

x

ஜல்லிக்கட்டு - உதயகுமார் திமுக மீது குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு போட்டியை விளம்பர விளையாட்டாக மாற்றிவிட்டதாக , அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் உட்பட பலரும் காயமடைந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திமுக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை, விளம்பர விளையாட்டாக மாற்றிவிட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்