அதிமுகவில் திடீர் சலசலப்பு - சர்ச்சையை கிளப்பிய பேனர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்திற்கு இணையாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் படமும் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, செங்கோட்டையன் தவிர்த்து வரும் நிலையில், இந்த பேனர் விவகாரம் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
