அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்-ன் அறிவிப்பு
அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்-ன் அறிவிப்பு
2026ல் தமிழகத்தில் ஒரே வெர்சன் (version) அது அ.தி.மு.க தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திராவிட மாடல் 2.0 என முதல்வர் பேசியது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், அ.தி.மு.க ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, தலைகுனிய வைத்தவர் முதலமைச்சர் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய 'ஓ'-வாக போட்டு தி.மு.க அரசிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் வெர்சன் 2 எப்போதுமே தோல்விதான் என தெரிவித்தவர் இந்தியன் 2.0 கூட தோல்வியைத்தான் சந்தித்தது என்று தெரிவித்தார்..
Next Story
