Eps | Sengottaiyan | செங்கோட்டையன் கோட்டையில் களமிறங்கும் ஈபிஎஸ் - சூடுபிடிக்கும் அரசியல் களம்

x
  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நவம்பர் 30 ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
  • மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
  • இதுவரை 174 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார் .
  • இந்த மாத இறுதியில் மீதமுள்ள தொகுதிகளுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்
  • ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
  • நவம்பர் 30 ஆம் தேதி கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிமுகவினருக்கு கட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்