நாளை மறுநாள் பொதுக்கூட்டம்.. ஆள் சேர்க்க புது யுக்தியை கையாளும் அதிமுக
ஊத்துக்குழியில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக புதுவகையான துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் விநியோகித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழியில் நாளை மறுநாள் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story