ஈபிஎஸ் போட்ட பரபரப்பு X தள பதிவு | EPS | AIADMK
திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தாம்பரத்தில் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்கிறது என்றும் விமர்சித்துள்ளார். நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை அரசு காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
Next Story