ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு
Published on

தமிழக சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது இந்த சுவாரஸ்யம்

நிகழ்ந்தது.

2001-2006ம் ஆண்டு இந்த அவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, துரைமுருகன் நடிப்பு துறைக்கு சென்றிருந்தால் உலக நடிகர் நமக்கு கிடைத்திருப்பார் என குறிப்பிட்டதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், அப்படி ஒரு வேளை நான் நடிகர் ஆகி இருந்தால், ஜெயலலிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும் என்றார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த சுவாரசியமான விவாதத்தை, உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com